அம்மா வீடு
அம்மா வீடு


அம்மா வீடு பெங்களூர்ல. அவங்க அம்மா வீட்லயே இருக்காங்கன்னு தான் பேரு.
என் குழந்தைக்கு அப்பா, அம்மாவ விட தாத்தா, பாட்டிய தான் அடையாளம் தெரியுது.
ஒரு வகையில எங்க ரெண்டு பேர் கிட்ட வளரது விட தாத்தா பாட்டி கிட்ட வளர்ந்தா நல்லதுன்னு நினைக்கிறேன்.
ஆனா, பொண்ணையே பார்ட்டி வாழ்க்கையில இருந்து வெளிய கொண்ட வர முடியாத இவங்க, என் பொண்ண எப்படி நல்லா வளர்ப்பாங்கனு பெரிய கேள்வியும் இருக்கு.
பேசாம எங்க அப்பா, அம்மா கிட்ட குழந்தையையும், அவளையும் வர சொன்னாலும் அதுக்கு வைப் காது கொடுத்து கேட்கிறது இல்ல.
அதுக்கு காரணம் எங்க அவங்களோட பார்ட்டி வாழ்க்கை பாதிச்சிடுமோங்கிற பயம்.
என்ன தான் ஹை-பை வாழ்க்கை வாழ்ந்தாலும் உள்ளக்குள்ள இருக்க அந்த ட்ரெடிஷன் டைவர்ஸ் வாங்க மறுக்குது . இன்னொரு விஷயம் டைவர்ஸ் வாங்குனா அது என் மகளோட வாழ்க்கையை வலுவா பாதிக்கும்னு எனக்குள்ள பெரிய பயம் இருக்கு.
ஆனா, தொடர்ந்து இப்படியே போனா என் மகளையே நான் இழந்துடுவேனோன்னு பயமா இருக்கு.
குழந்தைக்கு ரெண்டு வயசுல இருந்து நிறைய ஆரோக்கிய பிரச்சனை .
தாய் பால் சரியா கொடுக்காததால உடம்புல நோய் எதிர்ப்பு சக்தி கம்மியா இருக்குன்னு தெரிஞ்சவங்க, டாக்டர் எல்லாம் சொல்றாங்க.
ஹாஸ்ப்பிட்டல்! மூணு, நாலு மாசத்துக்கு ஒரு தடவையாவது ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போயிடுறாங்க.
இந்த வயசுலயே மாத்திரை, மருந்து, ஊசின்னு என் குழந்தையை அப்படி ஒரு நிலையில என்னால பார்க்கவும் முடியல. இதுல ஒன்றை வயசுல இருந்து டூட்லர்ல சேர்த்துவிட்டதால குழந்தைக்கு அப்பா, அம்மா மேல பெருசா ஈர்ப்போ, அன்போ இல்லாம போச்சு.