ஆன்லைன் ஆசிரியர்
ஆன்லைன் ஆசிரியர்


ஏண்டா! ரிடையர்டு ஆயாச்சு! இப்பபோய் பள்ளியில் ஆசிரியரா வேலை பார்க்கப்போகிறேன்னு சொல்றியே! ஆன்லைன் வகுப்புகள் இந்த வருடத்தில் புதிது! மாணவர்களுக்கு அது சரியான விதத்தில் போய்ச் சேரணும்! சும்மா வீட்டில் உட்கார்ந்துக்கிட்டே டீவி பார்த்துட்டு இருந்தால் அவர்களுடைய உணர்வுகள் புரியாது.... ஆயுள் முழுக்க கற்றுக்கொண்டே இருப்பவர் ஆசிரியர்தாம்மா!
ரிடையர்டு ஆனப்புறமாவது என்னுடன் இருப்பாய் என நினைத்தேனே! இப்ப வீட்டில்தானே வகுப்பு! மாணவர்களைப்பாருங்கள்! எப்படி ஆன்லைனில் ஆசிரியர்தின வாழ்த்துகளை தமிழில் தட்டச்சு செய்துள்ளார்கள் என்பது புரியவில்லை. நான் இன்னமும் அதைக் கற்றுக்கொடுக்கவில்லை. மாணவர்களிடம் இணையத்தில் விளையாடாதே என்று சொல்வதைவிட அதிலிருக்கும் பாசிடிவான செய்திகள் தருவது எப்படி பயன் தருகிறது பார்த்தீர்களா அம்மா! அம்மா மௌனமாகத் தலையை ஆட்டினாள்.