ஆசிரியர்
ஆசிரியர்


ஒரு தற்காப்புக் கலை கற்றுத் தரும் ஆசிரியரிடம் ஒரு மாணவன் சென்றான்.அவன் ஆசிரியரிடம் நான் மிக மிக விரைவாக தற்காப்புக் கலையை பயிற்சி செய்து கற்றுக் கொள்ள வேண்டும்.
அதற்கு எத்தனை ஆண்டு காலம் பிடிக்கும் என்று கேட்டான்.
அதற்கு ஆசிரியர் 10 ஆண்டுகள் என்று கூறினால் உடனே மாணவன் சற்றும் நிதானம் இல்லாமல் பொறுமை யின்றி நான் ஒரு நாளைக்கு பத்து மணி நேரம் கூட உடல் உழைப்பு செய்து நான் அந்த பயிற்சியை கற்றுக் கொள்ள மிக ஆவலாய் இருக்கிறேன். இப்போது சொல்லுங்கள் எத்தனை ஆண்டு தேவை என்று ?உடனே ஆசிரியர் சொன்னார் சற்றும் தயக்கமின்றி 20 ஆண்டுகள் என்று.
யாரிடம் ,ஆசிரியரிடம் வால் ஆட்டலாமா???