Deepa Sridharan

Abstract

4  

Deepa Sridharan

Abstract

யாரோ சொல்லிய கதை!

யாரோ சொல்லிய கதை!

1 min
539


சிவப்புக் கொள்ளியில் எரிந்து கொண்டிருந்தது சூரியன்- அநாதையாக

தொப்பலாய் நனைந்து காத்துக் கிடந்தது தார்சாலை -பாதங்களுக்காக

வீழ்ந்துவிடு என்று யாரோ சொன்னதை பூரணமாய் நம்பி இலைகளை உதிர்த்துவிட்டிருந்தது மொட்டைமரங்கள்- ஆங்காங்கே

இலைகளுக்கும் இமைகளுக்கும் நடுவே எத்தனைவண்ண விளக்குகள்

இரைப்பை இரைச்சலிட்டது தனிமையைப் புசித்து

விரல்களுக்கு நடுவே கேவல் சத்தம் கேட்பாறற்று எங்கோ முட்டி மோதி செவிகளுக்குள் மீண்டும் எதிரொலித்தது

ஒரு நாள் இல்லை ஒரு நாள் இந்த இலைச் சருகுகள் நான்கு பாதங்களோடு உரசிச் சிரிக்கும

அதைக் கேட்பதற்கு 

அன்றும் இந்தமொட்டை மரங்கள் பூரணமாய் நம்பித்தான் ஆக வேண்டும் வீழ்ந்துவிடு என்று யாரோ சொல்லியதை!


రచనకు రేటింగ్ ఇవ్వండి
లాగిన్