யார் கடவுள்
யார் கடவுள்
கண்டுகொண்டேன் இறைவனை...!
யாதுமாகி நிற்கும் பரம்பொருளை...
எங்கும் நிறைந்திருக்கும் தத்துவத்தை...
இன்னதென்று அறியவொண்ணா பரிமாணத்தை...
எத்தன்மைத்தாயும் மாறும் பைரவத்தை...
எதனையும் தனக்குள் ஈர்க்கும் காந்தத்தை...
அனைத்தையும் நடுநிலை ஆக்கும்
சூன்யத்தை...
அண்டசராசரங்களை எல்லாம் தன்னுள் மிதக்கவைத்து அழகு பார்க்கும் மிதப்பை...
கேட்டதைக் கொடுக்கும் கற்பகத்தை...
எண்ணம் வண்ணம் தோன்றும் செழுஞ் சுடரை...
அழிவும் ஆக்கமும் இல்லா அரும்பொருளை...
பேரறிவை...அறிந்தேன்
ஆற்றல் எனும் பெயரில்...!
