வருத்தமில்லை
வருத்தமில்லை


"எனக்கு எதை பற்றியும் வருத்தமில்லை" என்று
கூற ஆசையாக இருக்கின்றது.
ஓடும் நதி
அடித்து இழுத்து சென்ற
அக்கன்று குட்டியை
கண்டும் காணாதவாறு
கண் கலங்காதவாறு
கறையை கடக்க தோன்றுகிறது.
கனவுக்காக காதலைத் தொலைத்து
பின் சூழலுக்காக கனவைத் தொலைத்து
செல்பவர்களை
பார்க்கும் போது
பரிதாபம் கொள்ள கூடாதினி என்று
எனக்கு நானே உரைத்து கொள்கிறேன்.
விடியலை விழுங்கி
இதழ் விரிய
எச்சொழுக சிரிக்கும் இருளிடம்,
விடியலுக்காக வருத்தமில்லை
அடி வயிற்றில் வலி எழும்வரை
கன்னங்கள் காற்றடைத்த பையாக பெருத்து வலி எடுக்கும் வரை
சிரித்து கொள் என்று கூற போகிறேன்.
வருத்தப்படாதே என்று
யாருடைய தோலையும் தட்டி கொடுக்க போவதில்லை.
ஏனெனில்
அவர்கள் அழுகையை கண்டினி
மெய்யாக
எனக்கு வருத்தமே இல்லை.