விவசாயியின் சிரிப்பு
விவசாயியின் சிரிப்பு


பெற்றோரின் அரவணைப்பில்
தூங்கிய கனவுகளில்
தைத்திருநாள் நன்னாளில்
ஊரெங்கும் விவசாயம்
செழிக்க கரும்பெங்கும்
நிறைந்து நிற்க
விவசாயி மனமார
சிரிக்கின்ற விழா நினைவுகள்!
பகல்கனவுகள் பலிக்காது
என்றபோதினில்
விடியல்நேரமாக கனவுகள்
கண்டால் பலிக்குமென
காலைநேரத்தில் படுக்கையை அமைத்த
சிறுவயதுநினைவுகள்
அலைகரைகளைத்தொடுவதுபோல
தொட்டுவிட்டு சென்றனவே!