தாத்தா
தாத்தா


எழுபது வயதில் தமிழ் படிக்க
ஆசை வந்து கல்லூரி தொட்ட முதல்நாள்
இன்றும் நெஞ்சில் இனிக்கிறதே!
நெஞ்சில் வைத்து இணைபிரியா
சகியின் ஒத்துழைப்பால் அஞ்சல் வழி
கல்வியில் படித்த பட்டங்கள்
இன்று வலைதளத்தில்
பணம் புரட்ட வழி சொன்னதோ!
எந்நாளும் யாரிடமும்
கையேந்தா உள்ளத்தினை
மட்டுமல்லாது நோயின்றி உனதடி சேர்ந்திட
வரம் அளித்திடு இறைவா!