விட நினைத்த பழக்கம்
விட நினைத்த பழக்கம்


தொட்டுப் பார்த்துச் செல்லும்
நினைவுகள் - வருடிச் சென்றன!
புன்னகை வரவழைத்த நினைவுகள்
மனதுக்கு புத்துயிர் தந்தே சென்றன!
குத்திக் கிழிக்கும் நினைவுகள் -
ஏனோ வலியாகவும் வடுவாகவும்
மனத்துள் நிரந்தரமாய் குடியேறி
நிம்மதியையும் குடிக்கூலியாய்
வசூலிக்க மறப்பதில்லை!
அரிக்கும் நினைவுகளை அறுத்தெறிய முற்பட்டாலும் - ஏனோ
விட முடியா பழக்கமாய் நினைத்தலும் நாளும் தொடரத்தான் செய்கிறது!