விரிவதும் விரியாததும்
விரிவதும் விரியாததும்
அணிலோ குருவியோ
சப்பிய விதையில்
தளிர்த்தச் செடியில்
மொட்டொன்று தவிக்குது
அதிகாலைப் பொழுதில்
விரிவதும் விரியாததும்
விருப்பத்தின் சுதந்திரம்.
மண்ணிடம் கதைத்தது
சுருண்டு விழுந்த
கருங் கூந்தல்
விரிந்தது அவளுக்கு
விரியாதது உனக்கு
அணிலோ குருவியோ
விழுங்கிய மொட்டன்று
உயிர்மூச்சிற் கரைந்தது
காலத்தில் கட்டுண்டு
சுதந்திரம் பலிக்குமோ
நிலையாமைத் தன்மையில்
மொட்டுகள் மலர்வதோ
காலத்தீ குளிர்கையில்!