STORYMIRROR

Manimaran Kathiresan

Classics Inspirational Children

5  

Manimaran Kathiresan

Classics Inspirational Children

விநாயகனே

விநாயகனே

1 min
497

அரைத்த மஞ்சளாம் அழகாய் பிடித்து

வரைந்த பாலகன் வளர்ந்து நின்றான்

பகவதி யவளின் பாலக னிவனாம்

தகவலு மல்லா தந்தையும் சிவனே


மலைமகள் மகனாம் மங்களச் செல்வன்

தலைமகன் கணேசன் தாயிற் காவலன்

தேவியின் அறைக்கு தேவனும் வந்தான்

மேவிய பாலகன் மெல்லத் தடுத்தே 


காவல் நின்றவன் காலனை மறுத்தவன்

சேவகன் தொழிலை செவ்வனே செய்தவன்

சிவனின் சினத்தால் சீறிய சூலம்

அவனின் சிரத்தை அறுத்தது சிவனே


மணிமாறன் கதிரேசன்



Rate this content
Log in

Similar tamil poem from Classics