வேக கதிரோடு ஒரு காதல்
வேக கதிரோடு ஒரு காதல்


இரு சக்கரத்தை பார்த்தால் மனசோ வெட்டுக்கிளியை போல தாவி குதிக்குதே.. உன்மீது ஏறி சென்றால் சாலையே வெடு வெடுத்து போகும் வேகத்தில் கரடு முரடான பாதைகளிலும் பஞ்சுபோல் பறந்துவிடுதே.. பல குழப்பங்கள் மனதிலே ஓடினாலும் போகும் தூரத்தில் அதுவும் ஓடிவிடுகிறதே.. காற்றோடு காற்றாக என்னை உன்மீது ஏற்றி செல்கிறாய் முறுக்கும் வேக கதிர் திருப்பு முனையில் சுழற்றி வீசுதே....பாயும் பாச்சலில் நீ போடும் கூச்சலில் தெருவும் தெறிக்குதே...கண்கட்டி வித்தைபோல் மனதை கொள்ளை அடிக்கிறது உன் நீல நிற உருவமும்..நான் எழுதி பதித்த எழுத்துக்களும் உன் அழகை கூட்டுதே என்னை தாக்குதே.....நீயே போதும் என்றுமே உன் சக்கரத்தின் காவலனாய் இருந்துவிடுகிறேன்..