ஊரடங்கு
ஊரடங்கு
அன்புள்ள நாட்குறிப்பே!
ஊரடங்கிய காலைப்பொழுதில்
வயிற்றுத் தீப்பசி
வாட்டிய காரணத்தினால்
வீட்டோரம் காய்கறிக்கடை
உபயத்தால் கிருமிநாசினி
கடையெங்கும் கமகமக்க
காலியாகிக் கொண்டிருக்கும்
பர்சில் தேடி எடுக்கப்பட்ட
சில்லறைப் பணத்தில்
பழங்களும் காய்கறிகளும்
வினிகர் நீர்ல்கழுவிய பின் சமைக்கப்பட
தோட்டத்து கீரைகள் போரடிக்க
விதைகள் தேடிய விரக்தியில்
கீரைதண்டுகள் மண்ணில்
உயிராக நடப்பட
இறைவனுக்கு டிசம்பர் பூக்களுடன்
கரோனா நீங்க விண்ணப்பத்தினையும்
அளித்து வீட்டுக்குள் காத்திருப்பதை அறிவாயே!
முகமூ
டி அணியாத மக்கள்
மத்தியில் எச்சிலைத்
தாண்டிச் செல்லும்
மனப்பக்குவத்தை நீ கற்றுக்கொண்டிருக்கிறாயா?
இரண்டுமணிவரை கடைகள்
என்ற வரையறை
சிகரெட் புகைக் கடைகளுக்கு
இல்லையோ!
மக்கள் இவ்வாறு இருந்தால்
கரோனா எமன்
என்று போவான் நாட்குறிப்பே!
லெமன்கிராசும் வசம்பும் கலந்த
மெத்தையில் நீ சுகமாக
வாழ்ந்திருக்க
வேப்பிலை கலந்த மஞ்சள் நீரிலும்
சவலைக்கட்டிகளுமாய்
நாங்கள் வாழப் பழகியிருப்பது
ரோபாட் கால புதுயுகமோ!
நாட்குறிப்பே! ரோபாட்டிற்கும்
கரோனா வந்தால்
சவலைக்கட்டியாய் எது மாறும்!!!