ஊமை நெஞ்சுக்கு
ஊமை நெஞ்சுக்கு
உறங்கும் ஊமை நெஞ்சுக்கு,
வழியொன்று சொல்லடி,
மைந்தனின் ஆழியையே,
இருளும் ஊமை நெஞ்சுக்கு,
மெய் ஒளியை தருவாயே,
மைந்தனின் பாசப்புதல்வியே,
உடைந்த ஊமை நெஞ்சுக்கு,
அன்பின் வாசம் தருவாயே,
மைந்தனின் மறு உயிரே,
வாடும் ஊமை நெஞ்சுக்கு,
உயிர் தரும் பெண்ணாக,
வருவாயே நீ வருவாயே,
ஓடையில் ஓடும்,
நீர் போல விலகும் இவன் நெஞ்சுக்கு,
தடுப்பு அணையாக வருவாயே,
மைந்தனின் அரசியே,
வருவாயே நீ வருவாயே.