உறவு
உறவு
எதற்கு துடித்து போகின்றாய். .
கடந்து செல்லத்தானே போகின்றோம்.....
கனக்கின்ற நேரத்தில் எல்லாம் கழற்றிதான் பார்க்கின்றேன்...பிடிவாதமாய் இறங்க மறுக்கின்றாய்....
இறக்க நினைத்த எனை இறுகப்பற்றிக் கொண்டு இருந்தே தீருவேன் என்று அடம்பிடிக்கின்றாய்....
ஒரு நிமிடம் பட்டாம் பூச்சியாய் படபடக்கின்றாய்...
மறு நிமிடம் மவுனமாய் பரிதவிக்கின்றாய்...
கோவத்தில் எரிந்துவிட்டு சில்லென்று நனைந்தும் போகிறாய். சாரல்களில் நடுவில்...
வேண்டுமென்று விருப்பபட்டுவிட்டு...வேண்டாமென்று விலகவும் செய்கின்றாய்...
p>
பிரிந்துவிடலாம் என்று நினைக்கையில் பிரியத்தை அள்ளித்தெளிக்கின்றாய்...
விட்டு விடலாம் என்று நினைக்கையில் விடைபெற மறுக்கின்றாய்....
பிடிக்கவில்லை என்றாலும் பிடிவாதமாய்
பின்தொடர்வேன் என்கின்றாய்........
அலை எனக் கால் நனைக்க முற்படுகையில்..சூறாவளி யாய் சுழற்றிப்போடுகின்றாய்...
என்ன செய்வது ஒரு உடன்படிக்கையைதவிர...
கனமாக இல்லாமல் காற்றாய் இருப்பேன் என கூறு........
உன்னை தூக்கி வைத்துக் கொள்கிறேன்...
தென்றலில் நடுவே
வருடிக்கொண்டே...