உப்பரிகை
உப்பரிகை
1 min
299
மனமென்றும் உப்பரிகையில்
அன்னாந்தால் அத்துவானம்
கரும் அண்டைவெளிக்குள்
மூச்சுத் தினறல்
உயிரோடிழைந்த அகந்தை
வேரோடது அறுந்துவிட்டால்
தலைகுனியும் தருணத்தில்
மூச்சு வாங்கும்
சிறு மண்புழுக்கள்
அதன் உப்பரிகையில்
எனைப் பார்த்து!
ஏதேதோ ஊகித்து
வலைபின்னும் மனமே
வலைக்குள் சிக்காத
பொடி மீன்களுண்டு
நிஜம் அதுவே!
வலை கிழித்து
மீன் பிடிக்கும்
திறந்த மனமே
உன் உப்பரிகையில்
திளைக்குது விண்
மீன்கள் உன்னுடனே!