உங்கள் சேவகன்
உங்கள் சேவகன்


ஹலோ.... ஹலோ.....
கைபேசியை தேடாதீங்க....
நான்தான் தொலைபேசி!
என்னை தெரிகிறதா?
உங்கள் வீட்டில் ஒருவனாய்....
உங்கள் வீட்டு வரவேற்பு அறையில் ஓர் ஓரத்தில்....நான்
ட்ரிங்..... ட்ரிங்.... என சத்தம் போட்டவுடன்....
ஓடிவந்து என்னை ....
உங்கள் கழுத்தோடு அணைத்து....
உங்கள் உறவினர்களோடு
வரிசைக் கட்டி உட்கார்ந்து உரையாடல் செய்வீர்களே?
லோக்கல்.... எஸ். டி. டி..... ஐ. எஸ். டி..... என எத்தனை அழைப்புகள்!
நானே உருமாறி....
பல அவதாரம் ௭டுத்து...
அதில் ஒன்றாய் ஆன்ட்ராய்டு ஃபோனாய் அவதரித்துள்ளேன்!
உல்லாசமாக உரையாடல்...
நேரம் பார்க்கும் கடிகாரம்...
நிழற்படம் படம் எடுக்கும் ஒளிப்படக் கருவி....
பாடல் கேட்கும் வானொலி....
பார்த்துப் பேசும் காணொளி....
பணப்பரிமாற்றம் செய்யும் வங்கி....
எதையும் பதிவிறக்கம் செய்வேன் தகவலை வாங்கி!
தகவலைப் பரிமாற புலனம்....
தகவலை பதிவேற்ற வலையொளி...
கருத்துக்களைப் பதிவிட கீச்சகம்...
முகம் தெரியாத முகநூல்....
முகம் பார்த்து பேச காயலை...
எத்தனை.... எத்தனை..... சேவைகள்!
விளையாடும் ஆடுகளம்...
வைத்தியம் சொல்லும் மருத்துவர்....
அழகுக் கலை நிபுணர்....
உடற்பயிற்சி தரும் ஆலோசகர்...
சமையல் கலை வல்லுநர்....
சமயம் பார்த்து சொல்ல ஜோதிடர்....
இயங்கலை வகுப்பு.... ஈடில்லா கூகுளின் செய்திகள் தொகுப்பு!
ஊடுகதிரும் நானே... அச்சுப் பொறியும் நானே!
என்ன....என்ன .... தேவைகள்?
என்னிடம் கேளுங்கள்!
என்ன..... என்ன அயிட்டங்களோ?
எல்லாம் ஆன்ட்ராய்டு ஃபோனுக்குள்ளே!
நுழைந்து பார்த்தால் தெரிந்துவிடும்!
விடிந்த பொழுதும் முடிந்து விடும்!
விரும்பிய இடத்தில்....
விரும்பிய நேரத்தில்.....
விரும்பிய தகவலை....
விரும்பிய வலை தளத்திலிருந்து.......
நீங்கள் விரலால் தொட்டதை....
கண்ணிமைக்கும் நேரத்தில்.....சலிக்காமல்...
நிறைவேற்றி நான் தருவேன்!
பலரது வேலையை தனியொருவனாய்!
உங்களோடு கலந்திட்ட
உங்களின் உணர்வுகளோடு சேர்ந்திட்ட.....
உங்கள் சேவகன்...
ஆம் !நான் உங்கள் சேவகனே தான்!