தூது
தூது


திருக்குறளுடன் ஔவை
வழி காட்டிய ஆசிரியரே!
படித்த நூல்வழிபாதை
அமைக்க வழிகாட்டிய
தூண்டுகோல்விளக்கே!
பாடத்திற்குப் பொருந்தா
நடைமுறை வாழ்க்கை
நிலையினை கற்பிக்க ஏன் மறந்தீர்!
படிப்பது ஒன்றும்
வாழ்க்கைப்பாதை வேறாக
இருக்க சுவரெங்கும்
நீங்கள் வழிகாட்டிய கலாம் படங்கள்
நிறைந்திருக்க
நடைமுறைவாழ்க்கைக்கு
எப்படி மாறுவது ஆசிரியரே?
ஆண்டுகள் பல கடந்தாலும்
இணைய கதைப்போட்டி வழி
தூதாக ஓலை அனுப்ப
விரைந்தே நீங்களும்
தொடர்ந்து ஊக்குவிக்க
சொர்க்கத்திலிருந்து வருவீரோ!