STORYMIRROR

Siva Kamal

Abstract Tragedy Crime

4  

Siva Kamal

Abstract Tragedy Crime

துப்பட்டா

துப்பட்டா

1 min
436

பெண்களை துப்பட்டா அணியச்சொல்லி அறிவுறுத்தப்படும் போதெல்லாம் ஒரேயொரு கேள்வி தொக்கி நிற்கிறது. முழு பெண்ணுடலில் அது மட்டும்தான் கவனத்தை கவர்கிறதா என்ன? 

கணுக்கால் 

உள்ளம்பாதம் 

கால்மூட்டின் பின்மடிப்பு  

பிருஷ்டக்கன்னம் 

நடுமுதுகு

நீள்பள்ளம் 

காறையெலும்பு

பின்னங்கழுத்து 

குரல்வளைக் குழி

காதுமடல் 

கன்னக்கதுப்பு 

இதழ்வரி 

ஓரஇடை 

மணிக்கட்டு 

புறங்கை 

பச்சை நரம்பு 

விரல்நுனி

உள்ளங்கை ரேகை 

இத்தனையும், இதற்குமேல் அவள் பாவனையும் 

இவ்வளவு இருக்க துப்பட்டா மட்டும் அணிந்தால் போதுமா? கோணிப்பைக்குள் அவளை வைத்துக் கட்டி வைப்பதே சரியான முடிவாக இருக்கும்!


Rate this content
Log in

Similar tamil poem from Abstract