தடுமாறியதோ
தடுமாறியதோ

1 min

23.1K
கார் வண்ண மேகங்களின் பின்னணியில்
கண் சிமிட்டி சிரிக்கும் விண்மீன்களே - என்
கலங்கிய கண்களின் கண்ணீர் துளிகளில்
மழை நீரினைக் காண நகைத்தீரோ!
மங்கிய இரவொளியில் மயங்கிய கனவுகளை
நினைவுகளாய் நான் எண்ணி வாழ்ந்ததால்
நிலையில்லாது தடுமாறியதோ என் வாழ்வே!