தீமைக்கு அஞ்சு
தீமைக்கு அஞ்சு


வியாபித்திருக்கும்...
வெண்மையில்!
விழும் ஒரு சிறு கரும்புள்ளி!
நிறைந்திருக்கும்..
குவளை அமிழ்தில்!
கலந்திட்ட...
ஒரு சிறு துளி நஞ்சு!
போதி மரத்தடியில்..
அருந்தும் கள்!
ஞானத்தின் களை!
பாவத்தின் விலை!
தர்மத்தின் கொலை!
அதர்மத்தின் வன்முறை நிலை!
தீயினும் கொடியது..
தீமை!
சாட்சிப்பிழையும்!
காட்சிப்பிழையும்!
மனசாட்சியை மாய்த்துவிடும்!
தீமைக்கு அஞ்சு!