STORYMIRROR

Shakthi Shri K B

Abstract Drama Classics

4  

Shakthi Shri K B

Abstract Drama Classics

தேநீரும் நானும்

தேநீரும் நானும்

1 min
353

அதிகாலை பொழுது என் வாழ்வின் மிக முக்கியமான ஒரு பொழுது,

ஒவ்வொரு தினமும் நான் காத்திருக்கும் பலனை அடையும் நொடி விடியற்காலை,

விடிந்தபின் நான் துயில் எழுந்து தயாரான பின் அடுப்படியில் நுழையும் தருணம் அவ்வளவு மகிழ்ச்சி.


என் அன்பு அன்னையோ முதல் பணியாக வெண் பாலை காய்த்திருப்பாள்,

அதை வெந்நீரில் தே இலைகளை ஒரு தே கரண்டி போட்டு கொதியெழுந்த நொடியில்,

சற்று வெல்லம் சேர்த்து அதில் பாலை ஊற்றி இரண்டு கொதிவிட்ட அதை வடிகட்டும் அதிகாலை நேரம்.


என்னக்கு பிடித்த தேநீர் கோப்பையில் தேநீரை எடுத்துகொண்டு செல்வதும் ஒரு வித ஆனந்தம்,

மாடி படியில் அமர்ந்து என் செல்ல பாட்டியின் அறிவுரைகளை செவி கேட்க,

வாயில் தேநீரின் முதல் சுவை படர இந்த நொடி இப்படியே நீளாத என மனம் ஏங்க,


அந்த முதல் தேநீரின் அனுபவம் விரிவிக்க வார்த்தைகள் இல்லை என்னக்கு,

அனுதினமும் நான் உறங்க செல்லும்முன் எண்ணுவது அந்த அதிகாலை தேநீர் நேரத்தை தான்,

நான் எவ்வளவு சோர்வாக இருந்தாலும் என்னை மீண்டும் சுறுசுறுப்பு அடைய செய்வது என் முதல் தேநீரே.



Rate this content
Log in

Similar tamil poem from Abstract