STORYMIRROR

Manimaran Kathiresan

Classics Children

4  

Manimaran Kathiresan

Classics Children

தைப் பொங்கல்

தைப் பொங்கல்

1 min
300

தமிழர் திருநாள் தைமுதல் நாளாம்

தமிழர் போற்றும் தைத்திரு நாளாம்

புத்தரிசி வெல்லம் புதுமையில் கலந்து

அத்துடன் பாலும் அளவில் சேர்ந்து 


இனிப்பு பொங்கல் இறக்கி வைத்து

இனிமை பொங்க இறைவனை அழைத்து

கரும்பும் கிழங்கும் கலந்து படைத்து

அரும்பும் மகிழ்ச்சி அளவில் உயர்ந்து


வளரும் செல்வம் வழியை கொடுத்து

இளமை தங்கும் இயல்பை வளர்த்து 

வளமை பெருகும் வாழ்க்கை நிலைத்து 

குளம்போல் நிறைந்து குடும்பம் செழிக்க 



Rate this content
Log in

Similar tamil poem from Classics