புவி வெப்பம்
புவி வெப்பம்
கண்ணான உயிர்க்கெல்லாம்
உயிர்கொடுத்த மண்ணுலகே!
உனதுடல் வெப்பம் கூடியதே!
குறைத்திடும் வழிகூறு!
மண்ணுலக மாந்தர்சிலர்
உன்னுடலைக் கருதாது
பொருள் சேர்க்கும் நிலையிலே
அருள் சேர்க்க மறந்ததினால்
உரம்பொதிந்த உன்னுடம்பில்
கறைநிறையச் சேர்ந்ததுவே!
எண்ணற்ற பரிசுகளை
உள்கொண்ட உன்னுடம்பை
கண்ணுற்ற மாந்தர்சிலர்
களவாட முயன்றனரே!
உன்னுடம்பின் உபாதைகளை
உண்மையாக உணர்ந்திடுவோர்
தன்னலத்தை மறந்துநல்ல
மனதுடனே உழைத்திடுவோர்
பலராலும் உறுதியாகப்
பயன்பெறுவாய் நம்பிடுவாய்!
