பரிமாற்றம்
பரிமாற்றம்


செய்தி அனுப்பினால் ஏதாவது முலாம் பூசிவிடுவாய்.. .
கைப்பேசியில் பேசினால் அளந்து பேசுவிடுவாய்
உண்மை தெரியாத வேறு உலகத்தில் எத்தனை காலம் பயணிப்பது.....
நீ நீயாக இல்லாத உலகத்தில் எத்தனை காலம் வாழ்வது....
தானே எழுப்பிய சுவருக்கப்பால் எத்தனை காலம் காணாமல் போவது.
அதுவாக இதுவாக இருக்கலாம் என்று எத்தனைக் நாட்கள் காரணம் தேடுவது...
எதோ ஒரு நொடி உணர்த்துதலில் ..
முழுவதுமாய் புரிந்து வாருவாய் என்று எத்தனை முறை நம்புவது...
பார்வை பரிமாற்றத்தில் ..அது பேசும் மொழியில்...
உள்ளது உள்ள படியே வந்து விழலாம்....
இப்பொழுது..
பக்கத்திலேயே நின்று கொண்டிருக்கிறேன். .......
எப்பொழுது திரும்புவாய் ?...