பரிசுகள்
பரிசுகள்
பரிசுகள் பரவசம் தரும்!
அழகான வண்ணக் காகிதச் சுற்றலில்
அவற்றைப் பார்க்கும் போது
மனதில் மகிழ்ச்சி
பிரவாகமெடுக்கும்!
திடீரென வரும் பரிசுகள்
நாமறியாது வரும் பரிசுகள்
எதிர்பார்த்துக் காத்திருந்த பரிசுகள்
அனைத்தும் அன்பைப்
பரிமாறிக் கொள்ளும்
கருவிகள் தானே!
நமது இதயத்தின் உள்ளும்
மனதின் ஆழத்திலும்
நமக்கு இலவசமாகக் கிடைத்த
பரிசுகளை எண்ணி
ஏன் மகிழவில்லை!
அழகான காலையும்
புள்ளினங்களின் இசையும்
கதிரவ ஔியும்
வெண்ணிலவின் அழகும்
நமக்கு இயற்கையின்
பரிசுகள் தானே!
இறை படைத்த காற்றும், நீரும்
இன்ப மழைச்சாரலும்
அகன்ற வானமும்
ஆர்ப்பரிக்கும் கடலும்
அனைத்தும் இலவசப் பரிசுகள்!
மனதின் ஆழத்தில்
இலவசப் பரிசுகளுக்கு
இறைக்கு நன்றி சொல்லி
இதயம் கனிவோம்!
