பணிநிறைவு நாள் தலைமைக்கு
பணிநிறைவு நாள் தலைமைக்கு


சில மனங்களால் மட்டுமே....
.மனிதரை மனிதராய் பாவிக்க முடியும்....
மனந்திறந்து பாராட்ட முடியும்...
பொறுமையாய் பிரச்சனைகளை அணுகமுடியும்....
ஆராவாரமில்லாமல் அழகாய் கற்பிக்க முடியும்........
சாதித்த ஆணவமின்றி...இயல்பாய் பயணிக்க முடியும்......
அமைதியாய் பிரச்சனைகளுக்குச் செவி கொடுக்க முடியும்.....
அழகாய் அறிவுரைச் சொல்ல முடியும்....
அப்படி ஒரு மனத்துக்காரருக்கு விடைகொடுப்பது....
அப்படி ஒன்றும் எளிதல்ல...
நியாபகசக்தி ஒரு அதிசயம்...
மனிதம் நிறைந்த மனது அதிசயம்...
கற்பிக்கும் திறன் அதிசயம்....
அரவணைத்து அழைத்துச் செல்லும் திறமை அதிசயம்.......
பாராட்டும் மனது அதிசயம்.....
அதற்கு கொடும் நேரம் அதிசயம்.....
சுயநலம் நிறைந
்த உலகிலே....
மற்றவர் நலம் நாடும் குணம் அதிசயம்.....
அப்படி அதிசயங்களின் சொந்தக்காரருக்கு விடைகொடுப்பது....அப்படி ஒன்றும் எளிதல்ல...
பணி நிறைவு நாள்....
பணிக்கு மட்டுமே...
கூடவே
பயணித்த உறவுகளுக்கு இல்லை என்றாலும்....................
விடைகொடுப்பது..
அப்படி ஒன்றும் எளிதல்ல.....
வருகின்ற நாட்களில் ..
வாஞ்சை நிரம்பி இருக்கட்டும்....
விருப்பங்கள் எல்லாம் நிறைவேறட்டும்.....
கண்ட கனவுகள் எல்லாம் பலிக்கட்டும்....
எதிர்பார்த்த பயணத்தில் வெற்றிகள் மட்டுமே நிரம்பட்டும்....
பிரபஞ்சம் நிம்மதியை மட்டுமே வழங்கட்டும்......
நிறைய மகிழ்ச்சியோடும்...
ஆரோக்கியத்தோடும்..........
அன்போடும்.........
அழகாய் அரவணைத்துச் செல்லட்டும்.....
வாழ்த்துக்கள் ..