பெண்
பெண்
காலை விடியல்
உனக்காக என்றே
பத்திரிகைகள் பகன்றபோது
பயப்படாமல் சென்ற
மனம் அடுக்கக மனிதர்களின்
அழுக்கான மனங்களினால்
ரணப்பட்டது ஏனடி பெண்ணே!
கலர்கலராய் உடை உடுத்திய
காலம் போய்
இப்போதெல்லாம் கலர்கலராய்
கொடிகள் கானம் பாடும்
காலமிது!
தெருக்கள்தோறும் கொடிகள்
கானம் பாடும்
தீய மனிதர்கள்
சூழ் வட்டத்தில் பெண்ணே
உனது கல்வியின் புறப்பாடு
எப்போது தொடங்கப்போகிறது?