பாதி பாதியாக...
பாதி பாதியாக...

1 min

212
ஆசையில் பாதியாக என் மனது
கனவுகளின் எதிர்பார்ப்பினில்
பாதி நிறைந்தது உன் மனது
நிறைவேறிடும் நம்
வாழ்க்கைக் கனவுகளுக்கு
கொடுக்கல் வாங்கலில்
நித்தமும் நமக்குள் தகராறு.
அன்பினால் நிறைய மறுக்கும்
நம் இதயங்களுக்கு
என்று தான் விடிந்திடும்
நீயே சொல்!
முத்து முத்தாய் வியர்த்திடும்
நெற்றியின் கோடுகளில் மிளிர்ந்திடும்
முத்துகளின் வேட்கையில்
யார் தோற்றால் என்ன!