பாருக்குள்ளே நல்ல நாடு
பாருக்குள்ளே நல்ல நாடு
மத சாதிச் சண்டையில்
மனித மனங்கள்
நெகிழி பொம்மைகளாய்
வீற்றிருப்பு!
சிவப்பு குருதியில் நனைக்கப்பட்டு
கருப்பு மனிதப் பெண்
நெகிழி பொம்மையாய்
மாற்றப்பட்டு உலகினை
சுற்றி வருகையில்
ஒற்றுமையே வலிமை
என்பதை உணர்ந்து
பாரதி பாடிய முப்பதுகோடி
பாடலை இசைக்கத் தொடங்கியது!