STORYMIRROR

DEENADAYALAN N

Abstract

4  

DEENADAYALAN N

Abstract

பார்க்கும் பார்வையில்...

பார்க்கும் பார்வையில்...

1 min
352

 

 

 

அடுத்தவன் காதலித்தால்

அனந்தகோடி ஆனந்தமாம்

நண்பன் காதலித்தால்

நற்சான்று பத்திரமாம்

உறவினன் காதலித்தால்

உத்தமமான செயலாம்

தன் வாரிசுகள்

காதலித்தால் மட்டும்

தறி கெட்ட முறையாம்!



அவனும் அவளும்

காதலித்தால் பாராட்டு

எவனோ எவளோ

காதலித்தால் தவறில்லை

இவனும் இவளும்

காதலித்தால் தப்பில்லை – தன்

மகனோ மகளோ

காதலித்தால் மட்டும். . . !


ஒரே செயலுக்கு

வேறு வேறு எதிர்வினையா

விந்தையிலும் விந்தையிந்த

மனிதர் கூட்டம்!

                         





Rate this content
Log in

Similar tamil poem from Abstract