ஒரு கல் ஒரு கண்ணாடி
ஒரு கல் ஒரு கண்ணாடி


அன்புள்ள நாளேடே,
கண்ணாடியை உடைத்த கல் ஒன்று
ஓரமாய் விழுந்தே தான் -
செவ்வனே தன் பணியாற்றிய
மனதிருப்தியில் சிவனே என்றிருக்க
தாக்கிய வேகத்தில்
கல்லில் ஒட்டிக் கொண்ட
சிறு கண்ணாடி துகளும் தான்
தன் மேல் பட்ட ஒளி தனையே
பிரதிபலித்து - தன் குணம் தனையே
தக்க வைத்து - நிலை மாறும் உலகில்
தன்னிலை மாறாதே திகழ்கிறதே !