நட்பின் பிரிவு
நட்பின் பிரிவு
தூரம் தீர நேரம் அறியாமல்
நாம் நடந்தோம் ,
காலமும் போதவில்லை
இனி நேரமும் மீதமில்லை !!
சட்டென நகர்ந்து விட்டன
இந்த அழகிய நாட்கள்
பட்டென விலகிவிட முடியாத
நம் பழகிய ஆட்கள்..
மதிய உணவை பகிர்ந்தோம்
புதிய உணர்வை பகிர்ந்தோம்
எங்கும் நிறைந்தது ஒருமைப்பாடு
இனி தனியே பிரிவோம்
ஒருமை 'பாடு'
நாம் அமர்ந்திருந்த
நாற்காலியில் மலரும்
அடுத்த நட்பு
பலரும் கடந்த
இந்த தருணத்தில்
நம்மையும் நிருத்தியதே
காலத்தின் சிறப்பு ..
பொழுதெல்லாம்
உன்னுடன் இருந்ததை
அழுதெல்லாம்
அழிக்க முடியாது
நினைவுகளை மட்டும்
சிந்திக்கலாம்
நிச்சயம் ஒருநாள்
சந்திக்கலாம் ....