STORYMIRROR

Se Bharath Raj

Abstract Classics Inspirational

4  

Se Bharath Raj

Abstract Classics Inspirational

நண்பன் என்பவன்

நண்பன் என்பவன்

1 min
290

நண்பன் என்பவன்,

உன் சிரிப்பைக் கேட்க

கேளிக்கை பேசுபவன் மட்டும் அல்ல அவன்.,

நீ கண்ணீர்விட்டு அழுவதை அனுமதித்து

உன்னை ஆறதழுவியவனும் அவன்..

நண்பன் என்பவன்,

உன் சிந்தனைகளைக் கேட்டு 

நீ வளர வழிவகுக்கும்

ஞானி மட்டும் அல்ல அவன்.,

நீ குழப்ப நிலையில் புலம்ப

இருள் படர்ந்த உன் அறையின் 

மூலை இடமும் அவன்..

நண்பன் என்பவன்,

உன் நல்வினைகளை ஏற்று கொண்டு 

உன்னுடன் இருந்து உன்னை 

ஒளிர செய்பவன் மட்டும் அல்ல அவன்.,

உன்னை விட்டு விலகி

உன் தீவினைகளை நீ உணர

உன்னை வருத்தி 

தன் உயிரையும் விடுபவனும் அவன்… 


Rate this content
Log in

Similar tamil poem from Abstract