நன்மை பிறக்க ஒரு புதுமை செய்வோம்
நன்மை பிறக்க ஒரு புதுமை செய்வோம்
கடந்த காலம் என்பது ஒரு அனுபவம் அதைப் பற்றி சிந்திக்க தேவையில்,
எனினும் கடந்து வந்த பாதையை நினைவில் கொண்டு வாழவேண்டும்,
இனி பிறக்க போகும் புது வருடம் நன்மை புதுமை கலந்து இருக்க எண்ணுவோம்.
வருகிற புது வருடத்தில் மகிழ்ச்சி மட்டுமே மலர வேண்டும் அனைவரின் வாழ்வில்,
எந்த ஒரு செயலிலும் வெற்றி கிடைக்கவேண்டும் முயற்சி செய்யும் அனைவருக்கும்,
செல்வ வளம் அருவி போல பெருக வேண்டும் இந்த பூமியில் என் நாளும்.
இயற்கையின் மாசை குறைக்க முயற்சிகள் பல செய்ய வேண்டும் மனிதர்கள்,
உலகில் உள்ள அனைத்து உயிரினத்தை பாதுகாக்கும் கடமை ஓங்கட்டும் நம்மிடம்,
சேர்ந்து வாழும் வாழ்க்கை சிறக்க ஒற்றுமையை போற்றுவோம் இந்த புதுவருடத்தில்.
பேர் அன்பை கொண்டு நட்பு பாராட்டுவோம் இந்த வையகத்தில் அனைவரிடத்திலும்,
வாழும் இந்த காலத்தையே சொர்க பூமி வாழ்க்கையாக மாற்றுவோம்,
நல்லது நிகழ வேண்டும் என்றால் நாமே அந்த நல்லதை முதலில் செய்வோம்,
நாம் அப்படி வாழ்ந்தால் பிறக்கும் காலம் ஒரு பொற்காலமே !
