நம்பிக்கை
நம்பிக்கை


நாளை விடியும்
என்றே நினைக்கையில்
ஏன்தான் விடிகிறதோ
என்றே கூலித் தொழிலாளியின்
ஒட்டிய வயிறு
ஓலமிட்டபடி கடவுளின்
பாதங்களை அடைய
காத்திருக்கிறது!
பிணங்களை வட்டமிட
விருந்து பசியாற
வல்லூறுகள் வானில்
மட்டுமன்றி இரக்கமற்ற
பணமுதலைகளும்
அடுத்த வருட ஓட்டுசீட்டுகளுக்காக
காத்திருக்கும்போது
சஞ்சீவிமலைதூக்கி
கொண்டுவரும்
கடவுளுக்காக உலகம் நம்பிக்கையுடன்
காத்துக் கொண்டிருக்கிறது!