நிம்மதி
நிம்மதி


நெஞ்சில் கொள்ளும் நிம்மதி... அதுவே
வாழ்வின் சன்னிதி...
கணக்கில் கொள்ளா எதிர்மறை எண்ணங்கள்
கொல்லும் மன நிம்மதி... இதுவே தெய்வ நீதி!
இயற்கையோடு பொருந்த வாழ்வதும்
இயற்கை அளித்த இறைவனோடு தொழுவதும்
மனிதரை இனம் கண்டு அன்பு கொண்டு பழகுவதும்
பெருக்குமே உள அமைதி... அது உனக்குள் உள்ளதா கேள் நிதம் நீ!
உயர்வதும் தாழ்வதும் உன்னாலே... உண்மை
உணர்ந்தால் பகை ஏது?
தீமையும் நன்மையும் உன்னாலே... உன்
கரு மைய்ய விளக்கம் தேர்ந்தாயோ நீயே சொல் !
உள்ளத்திலே களங்கம் உடலிலே நோயாம்
அறிந்தவர் எத்தனை பேர்... ஆய்ந்தவர் எத்தனைப் பேர்...
அறிந்து கொண்டும் அறியாமை
இருளிலே வாழ்பவர் எத்தனைப் பேர்!
கடலினை பானையில் அடைத்தாலும்
ஓட்டை ஒன்று
உண்டானால்
பானை தான் கொள்ளுமோ கடலினை... எதிர் மறை
நினைவும் அவ்வாறே... அமைதி கொள்ள அமைதி பழகு !
உலகியல் நிகழ்வுகள் உலாவரும் செய்திகள்
ஊடகங்கள் உரைத்திடும் பொய்மைச் பிரசாரங்கள்
கைபேசி விவகாரங்கள் குடும்ப வாழ்க்கை ஊடே வரும்
வில்லகங்கள்... அத்தனைக்கும் நீயே குறி... குறிப்பறிதல் நலம்!
ஆழ்ந்து போ உனக்குள்ளே... அனுதினமும் அரை மணி நேரம்...
நீ...அன்பா... அறிவா... கோபமா.... தாபமா...
பொய்மையா... பொறாமையா... வஞ்சமா...
ஆராய்ந்து தெளி ... அழி அடியோடு... அமைதி பொங்கும்!
மன்னிக்கும் குணமும் பொறுக்கும் திறமும்
ஆளுமை வளர்க்கும்... ஆருயிரை ஈர்க்கும்...
உனக்குள் அமைதி இல்லாமற் உலகிலே அமைதி எங்கே...
ஓ... கடலின் துளியே... நீ மாறினால்... கடலும் மாறுமே!