நீங்கா காதல்...
நீங்கா காதல்...


நீ வேண்டும்,
என் விழி வியக்க விரிந்தாடும் மயிலாய் அல்ல,
என் வலி மறக்க இசைபாடும் ஓர் குயிலாய்!
நீ வேண்டும்,
நடந்து பழகிய நகரமாய் அல்ல,
நினைவில் நித்தமும் தொலைந்திடும் பொழிலாய்,
நீ வேண்டும்,
அரிதாய் தோன்றும் வண்ண வானவில்லாய் அல்ல,
நித்தமும் என்னை நீங்காத நீர்த்திரையாய்...💙
நீ வேண்டும்....