நீ ஒரு மாயை!
நீ ஒரு மாயை!


என் கண்களை தழுவிய
நீ ஒரு மாய ஒளி!
என் எண்ணங்களில் தவழும்
நீ ஒரு மாய கனவு
என்றும் என் உணர்வுகளில்
நீ ஒரு மாய நிலை கொண்டாய்?
மென்மையான என் மனதினை
உன் மாய உள்ளம் கொண்டு
இன்று நீ தகர்த்து எறிந்தாய்
இன்னும் தேவையா எனக்கு
இந்த மாய பந்தம்?