முதற் மூச்சு பெற்ற நாள்
முதற் மூச்சு பெற்ற நாள்
ஏதும் நினைவில் இல்லை
வளர்ந்த பின்னே சொன்னார்கள்
வாயடைத்து போனேன்
நான் வந்த வேளையை எண்ணி...
அனைத்தும் அன்னையவளின் துணையுடனே
நீரும் சோறும்
காற்றும் கழிவும்
அனைத்தும்...
அன்று ,
நான் தனித்து முதல் முறையாக
பூமித்தாயின் காற்றை உண்டபோது
ஏனோ எனக்கு அழுகை
மற்றவருக்கோ மட்டற்ற மகிழ்ச்சி
காரணம் தான் என்ன என்றேன்
உயிர்த்தோன்றல் மகிழ்ச்சியே என்றனர்
அவ்வாறானால்,
எண்ணிலடங்கா மகிழ்ச்சியை
இப்புவித்தாய் கொண்டாளோ?
அன்று ,
மகிழ்ச்சியின் கரையில் நானிருக்க
மகிழ்ச்சியின் கடலிலே அவர்கள்...
நான் கொண்ட மூச்சைப் பெற்று
வந்தாளே என் மகளும்...
அவளுக்கும் நினைவில் இல்லை...
நினைவிற்கு வரும்போது சொல்கிறேன்
என் முதற் மூச்சு நாள்
இருட்டில் இருந்து பகலா இல்லை
பகலில் இருந்து இருட்டா என்று.