முருகா வருவாய் அருள் தருவாய்
முருகா வருவாய் அருள் தருவாய்
இயற்றிடும் பாக்களில் இருந்திடும் சிறப்பு
இயலாதவ னென்னையும் இயக்கிடும் பொருட்டு
இயற்றுவேன் உன்புகழ் இப்பாட்டால்
இயற்தமிழ் கொண்டு இசையோடு முழங்குமே
தாள்பணிந்து துவங்க தகருமே செருக்கும்
தோள்தந்து உதவத் தோன்றுக குமரனும்
வேதனையைப் போக்கிடும் வேலுடைய
நாதனாம் உலகினில் நல்லதோர் துணையாமே
அன்பின் எல்லையே அப்பனே ஆசானே
அன்னையும் நீயே அடைக்கலம் புகுந்தேனே
தடைகளும் தோன்றும் தன்னிடமே
தடைகளைத் தகர்த்து தன்வினை அறுப்பானே
மணிமாறன் கதிரேசன்
