முகமூடி
முகமூடி
1 min
23.3K
உலகமே முகமூடி அணிந்து
உலா வருகிறதோ ?
இது - நோய்த்தொற்றை
குறைத்திடவோ ? - அல்லது
பிறர் முகம் பார்த்தாலே
சிநேகமாய் வந்து
ஒட்டிக் கொள்ளும்
புன்னகையையும்
மனித இணைப்புகளையும்
அறுத்திடவோ ?
விளங்கவில்லை -
பரபரப்பில் ஏற்கனவே
பேசவும் புன்னகைக்கவும்
மறந்து விட்ட உலகில்
முகம் காணவும் தடுக்கும்
முகமூடிகள் ஏற்படுத்தவிருக்கும்
மாற்றங்கள் என்னென்னவோ ?