முகமூடி
முகமூடி
1 min
24.4K
நன்மை என்று எதை
நினைக்கிறோமோ
அந்த நன்மையினுள்ளும்
இருக்கும் கசடு
என்பதை யார் அறிவாரோ?
போலிகளுடனே வாழும்
அந்த ஜீவனாம்சத்தை
போலி என்று யார்
அறிவாரோ?
கண்ணுக்கு புலப்படாத
வகையில் சுற்றி திரியும்
விஷத்தை யார் உட்கொண்டு
அது விஷம் என்று
புரியவைப்பாரோ?
கண்ணால் காண்பதும்<
Advertisement
/em>
பொய் காதால் கேட்பதே
மெய் என்று அறிந்த இம்
மக்கள் ஏன் அந்த போலி
பையில் சிக்கிக்
கொண்டிருக்கிறார்களோ?
உன் கள்ளக்கபடம் பொய்
என்று நான் அறிந்தேன்
என சொன்னால் ஏற்குமோ
இவ்வுலகம்?...
தீர விசாரி மனிதா
தீர விசாரி
போலி விஷங்கள்
நட மாடும் உலகம்
இது மானிடா !!!