STORYMIRROR

Priya Virgo

Abstract

4  

Priya Virgo

Abstract

அம்மா...

அம்மா...

1 min
23.3K

           


ஒன்பது மாதங்கள் என்னை சுமந்துப்பெற்றாள்

   பாருலகம் யாவற்றையும் பார்க்கச்சொன்னாள்

இரத்தத்தை பாலாகக் கறந்து கொடுத்தாள்

   பொறுமையே பலமென்று கற்றுக்கொடுத்தாள்


கண்ணின் இமைகள் போல் பாதுகாத்தவள்

  என்னை பற்றி எனக்கே புரியவைத்தவள்

பெண்ணின் மகிமையை எடுத்து காட்டியவள்

  அன்பின் அடையாளமாக உருவெடுத்தவள்


விண்ணகத்தின் விளக்காய் என் அம்மா

  மண்ணகத்தின் ஒளியாய் என் அம்மா

அன்பென்ற மழையிலே அகிலங்கள் 

  நனைந்தாலும் அம்மாவின் அன்பு சுகம்


ஒன்பது மாதங்கள் கருவறையில் சுமந்தால்

  பல வருடங்களாக மடியில் சுமந்தாள்

ஆழியின் அமுதாய் மாசற்ற மாணிக்கமாய்

  விலையற்ற வைரமாய் செம்மையான 


அன்பை அன்றிலிருந்து இன்றுவரை 

  ஊட்டுகிறாள் நித்தம் நித்தமும்

என்னை ஒன்பது மாதம் சுமந்து பெற்ற

 உனக்கு என்ன கைம்மாறு அம்மா செய்வது.... 


இவ்வுலகில் அம்மாவின் அன்பை போன்று

  வேறொன்றும் இல்லை இல்லை இல்லை....


Rate this content
Log in

Similar tamil poem from Abstract