ஏஞ்சல் வந்தாள்...
ஏஞ்சல் வந்தாள்...


🌺 எத்தனையோ ஏஞ்சல்கள்
ஜோதியை போன்ற ஒரு பெண்
தன்னை காப்பாற்ற வரமாட்டாளா
என்று ஏங்கும் உலகில் நாம்
வாழுகிறோம்...
🌺 பொன்மகளாய் அல்லது பொன்
மகனாய் ஒருவர் நியாயத்தை
நிலைநாட்ட வருவார்களா என்று
ஏங்கும் பலர் வாழும் உலகில் நாம்
வாழுகிறோம்...
🌺 குற்றத்தை தண்டிக்க வந்த
ஜோதியின் மீது குற்றம் சாட்டும்
உலகில் நாம் வாழுகிறோம்...
🌺 ஒருவர் கூறியதையே அப்படியே
நாமும் நம்பி தீர விசாரிக்காமல்
ஜோதியை நாமே
குற்றவாளியாக்கிய உலகில் நாம்
வாழுகிறோம்...
🌺 ஒரு பெண் சுயவிருப்பம்
இல்லாமல் அவளை வற்புறுத்தி
தன் கேவலமான ஆசைகளை
நிறைவேற்றும் ஆண் குஷியாக
வெளியே சுற்றும் உலகில் நாம்
வாழுகிறோம்...
🌺 இவன் தான் உண்மையான
குற்றவாளி என்று சொல்லாத
அளவுக்கு பணம் நடனமாடும்
உலகில் நாம் வாழுகிறோம்...
🌺 தண்டனைகள் கடுமையாக
இல்லாததால் குற்றங்கள்
நாளுக்கு நாள் அதிகரித்து
கொண்டே வருகிற உலகில் நாம்
வாழுகிறோம்...
🌺 ஒரு முறை கேட்ட செய்தியை ஒரு
வாரத்தில் மறந்து செல்லும்
உலகில் நாம் வாழுகிறோம்...
🌺 விடியலை தேடும் உலகில் நாம்
வாழுகிறோம்...
🌺 சுதந்திரம் நாட்டுக்கு மட்டுமே
இன்னும் பெண்களுக்கு
சுதந்திரம் கிடைக்காத உலகில்
நாம் வாழுகிறோம்...
🌺 தண்டனைகள்
கடுமையாக்கினால் குற்றங்கள்
குறையும் ஆனால் இந்த
தண்டனைகள்
கடுமையாக்கப்படுமோ என்று
பாதிக்கப்பட்ட பல பெண்கள்
துடிக்கிறார்கள்...
🌺 அவர்களின் துடிப்பு ஒன்றும்
பெரிதல்ல என்று நினைக்கும்
மனித ஈனப் பிறவியே சென்று
பாதிக்கப்பட்ட பெண்களில்
ஒருவராக நின்றுப்பார்
அறிந்துப்பார்...