STORYMIRROR

CA Manimaran Kathiresan

Crime

4  

CA Manimaran Kathiresan

Crime

கடவுளின் தற்கொலை

கடவுளின் தற்கொலை

1 min
23.9K


கடவுளும் செய்துக் கொள்வான் தற்கொலை

கடவுளின் பெயரால் விளைந்திட்ட செயற்பிழை

கடவுள் நானே என்றவன் முதற்பிழை

கடவுளை விளைவிக்கும் இவனது செயற்பிழை

கலியுகத்தில் நம்பிக்கை கூடஒரு பொருட்பிழை

கலியுகத்தில் பிறந்ததே நம்மில் பிழை

ஆடம்பர ஆசிரமங்கள் அரண்மனை போலே

ஆடைகளின் எழில்நடை துறந்தவர் போலே

அழகாக கட்டிய ஆலயமும் உன்னிடம்

அளவில்லா பணச் சேர்க்கையின் எண்ணம்

அழகிய சொல்லால் அனைவரையும் ஈர்த்தாய்

அறிவுடைய மாந்தரையும் மாந்திரீகம் செய்தாய்

அள்ளஅள்ள குறையாத பணத்தையும் பெற்றாய்

அகில உலகில் கடவுளாக வளர்ந்தாய்

சிதலமடைந்த ஆலயம் காக்கவே மறந்தாய்

சிறப்புடன் நீவாழ ஆசிரமம் படைத்தாய்

சிஷ்யர்கள் என்றோரு படையையே வளர்த்தாய்

சிறந்ததொரு மனிதராய்  உலகில

் வாழ்ந்தாய்

சமயம் சார்ந்த கலைகளையும் காசாக்கியாச்சு

சமயத்தைக் கூடக்கூறு போட்டு வித்தாச்சு

சமயத்தின் பெயராலேயே வியாபாரம் தொடங்கியாச்சு

சகலகலா தொழிலதிபர் விரைவில் ஆயாச்சு

கடவுளே இல்லையென கூட்டமும் கூடிடுச்சு

கடவுள் நம்பிக்கை தவறென ஆக்கிடுச்சு

கடந்தகால வழிமுறைகள் சமயத்தையே மறந்திடுச்சு

கடவுள்னா சிலமதம் தான்னு ஆகிடுச்சு

பற்றற்று வாழ்ந்து கடவுளையே அடைந்த

பகவான் காலடியை பற்றியே வாழ்ந்த

பலசித்தர்களும் தன்னை கடவுளென கூறவில்லை

பற்றுடன் வாழ்ந்திட கடவுளும் தெரிவதில்லை

கடவு உள் என்பதே கடவுள்

கடந்து உள்செல் என்பதே பொருள்

கடந்தவன் தன்னை அறிந்ததன் பொருள்

கடக்க உள்தெரியும் உன் கடவுள்

மணிமாறன் கதிரேசன்      



Rate this content
Log in