மருத்துவர்
மருத்துவர்
கண்ணுக்குப் புலப்படாமல்
அங்கிங்கெனாதபடி
நீக்கமற நிறைந்திருப்பார் - இறைவன் !
நம் கண்முன் பல
இன்னுயிர் தமையே
காத்திட - தன்னுயிரையும்
தயங்காமல் பணயம் வைக்கும்
மருத்துவரும் இறைக்கு சமமன்றோ !
வியாபாரப் பொருளாகும் மருத்துவம் - இப்படி
அங்கலாய்ப்பு பல இருந்தாலும்
தன் கடமைக்கும் பணிக்கும்
நியாயம் சேர்க்கும் மருத்துவர்கள்
சிலரின் நல்மனத்தால்
மக்கள் மனதில் உயர்ந்தே நிற்கிறார்கள் - இந்த நடமாடும் தெய்வங்கள் !
