மனஉறுதி
மனஉறுதி
காற்றடித்தாலும் நகர்ந்து விடாது !
மழையடித்தாலும் கரைந்து விடாது !
வெயிலடித்தாலும் உருகி விடாது !
பனியடித்தாலும் உறைந்து விடாது !
நின்றவிடத்தில் அசையாமல் நிற்கும்...
மலையை போன்ற மனஉறுதி கிடைத்தால் எதற்கும் கலங்காமல் வாழலாம்.
மனஉறுதியை வளர்த்து கொள்வோம் !