மின்னஞ்சல் காதல்
மின்னஞ்சல் காதல்
மழையாய் உணர்வுகள் பேச
வார்த்தைகள் திருமணத்திற்குமுன்
உரச பிழையாய் சில
அனர்த்தங்கள் மின்னஞ்சல் வடிவில்
பேச பெண்ணின் மனம்
பேச யாருமில்லை அங்கு!
உடலழகை மட்டும்தான்
எதிர்நோக்கும் சமுதாயம்
பெண்ணின் மனதறிந்து
பெற்றோர் மணம் புரியும்
நாள் இனி எப்போது வருமோ!
ஆணின் ஆதிக்கம்
அற்ப புத்தி இலக்கணம் மாறாதவரை
பெண் பாதுகாப்பாக இணையத்தில்
வாழவேண்டும்!!