STORYMIRROR

Manoharan Kesavan

Inspirational

4  

Manoharan Kesavan

Inspirational

மெல்லப் புதையும் மனிதம்

மெல்லப் புதையும் மனிதம்

1 min
352

போரின் கரங்கள் இறுகிப் பிடிக்க

கருகிச் சாய்கிறது...

மனிதம்...

கருணையின்றி...இரத்தக் கண்ணீரில்!

மரணம் எந்த நொடியில் எனப்

பதறவைக்கும் நொடிப் பொழுதுகளின் சப்தம்...

இமைக்கா

நெஞ்சத்தின் அலறல்...

 கேட்பவர் யாரிங்கே...இப்பூவுலகில் !

தான் தனது என்னும் அகங்காரம் ஒரு புறம்...

தனது உரிமை தனது நிலம் எனும் நிலைப்பாடு ஒருபுறம் ...

மோதலில் தொடங்கும் எந்த ஒன்றும்

நிம்மதியைத் தருவதில்லை...

அந்தோ ! அப்பாவிப் பெருமக்கள் 

என்ன குற்றம் செய்தனர் 

இந்தத் தவறில்...!

மதத்தின் பெயரால் ...

ஆணவத்தின் அலட்சியத்தால்...

பண பலம் படை பலம் கொண்ட செருக்கால் ..

நிலம் பெருக்கும் வன்திமிரால்...

இன்னும் 

இந்த மண்ணுலகில் பேரழிவுகள் தான் எத்தனை எத்தனை !

கண்கள் பார்க்க மறுக்கிறது...இந்த அவல நிலையை!

காதுகள் கேட்கக் கூசுகிறது...அலறல் சத்தம் கேட்க ஒண்ணாமல்...!

மனம் பதறித் தவிக்கிறது...பிஞ்சு நெஞ்சங்கள் சிதறும் நிலைகண்டு !

போதும் மானுடமே...இந்தப் போரின் 

வன்மங்கள்!

மெல்லப் புதையும் மனிதம் இனியாவது

மெல்ல எழட்டும்...

அன்பினில்...

என்றும்

என்றென்றும்...

நாம் அனைவரும் மனிதர் எனும் ஒற்றுமை உணர்வில்!


Written by,

MK



Rate this content
Log in

Similar tamil poem from Inspirational